ப்ளூமிங்டன் தமிழ் சங்க மக்கள் அனைவருக்கும் BTS 2012 குழுவின் மனமார்ந்த வணக்கம்.
இதுவரை BTS’ன் அனைத்து நிகழ்சிகளுக்கும், விழாக்களுக்கும் வருகை தந்து வெற்றி பெற செய்த அனைவருக்கும், விழாக்களுக்கு உதவிய BTS நண்பர்கள் குழுவுக்கும் (Volunteers) மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டவர்களுக்கும் எங்களின் உள்ளம் கனிந்த நன்றி.
இதுவரை நீங்கள் BTS குழுக்களுக்கு அளித்த உங்களின் ஆதரவை , BTS 2012 குழுவுக்கும் தொடர்ந்து அளித்து, எதிர்வரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உங்களின் பங்கை தொடர்ந்து அளிக்குமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுகொள்கிறோம்.
இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நடைமுரைகிணங்க தற்போதைய BTS 2012 குழுவில் Thiru. விஜய் ஜெயராமன் (தலைவர்), Thiru. முத்துவேல் கண்ணையன் (காரியதரிசி) மற்றும் Thiru. நாகராஜன் சுப்பய்யா (பொருளாளர்) அவர்களும் பொறுப்பேற்று உள்ளார்கள். மேலும் குழுவை வெவ்வேறு திட்டக்குழுக்களாக அமைக்க உள்ளபடியால், இக்குழுவில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தயவுசெய்து கீழ்க்கண்ட ஈமெயில் முகவரிக்கு உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும். (நமது ப்ளூமிங்டன் / நார்மல் தமிழ் சமுதாய வளர்ச்சியில் ஆர்வம் உள்ள நமது தமிழ் சமூகத்திலுள்ள எவரேனும் விருப்பம் தெரிவிக்கலாம்).
2012’ம் ஆண்டு குழு அமைத்தல் இந்தவர இறுதிக்குள் முடிக்க இருப்பதால் தயவுசெய்து உங்கள் விருப்ப ஈமெயிலை வருகிற வெள்ளிகிளமைக்குள்(04/27/2012) அனுப்பி வைக்குமாறு கேட்டுகொள்கிறோம். இந்த குழு அமைத்தல் முடிந்தவுடன், விரைவில் 2012’ம் ஆண்டு நிகழ்சிகளுக்கு குழு முன்னிலையில் உருவகம் கொடுக்கப்பட்டு அனைவருக்கும் அறிவிக்கப்படும்.
அனைத்து நிகழ்சிகளுக்கும் வந்து ஆதரவு தரும் அன்பு நெஞ்சங்களும், , விழா பங்கேற்பாளர்களும், , நண்பர்கள் குழுவினரும் (Volunteers) இல்லையென்றால் எந்த இயக்கமும் இல்லையென்று சொன்னால் மிகையாகாது. , எனவே இது உங்களது தமிழ்சங்கம் என்பதை நினைவில்கொண்டு இந்த வருட விழாக்களிலும் உங்களது பங்கேற்பையும் ஆதரவையும் தந்து சிறப்பாக நடத்தித்தருமாறு கேட்டுகொள்கிறோம்.
நீங்கள் அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி -->
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
We will try to stay transparent and communicate the message as soon as it is ready. We also will try to be proactive in finding any issues and handling them appropriately. Also we will try to accept any direct critics and will either correct or respond back as needed. If in case you are not comfortable talking directly then you can approach our team of four to help.
We are open to all innovative ideas to improve our community, we will try to execute if possible or will document for future.
Stay tuned for upcoming events.
தற்போதைய BTS 2012 குழு எங்களின் பணிவான நன்றிகலந்த வணக்கத்தை தெரிவித்துகொள்கிறோம்
நன்றி !!!!!!